வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (05/09/2015)

கடைசி தொடர்பு:13:58 (05/09/2015)

கௌதம் மேனனைக் கட்டிப்போட்ட இயக்குநர்

தனி ஒருவன் படத்திற்காக இயக்குநர் மோகன் ராஜா மற்றும் அரவிந்த் சாமி ஆகிய இருவரும் எதிர்பாரா விதமான பாராட்டுகளைப் பெற்று வருகிறார்கள். இந்நிலையில் இயக்குநர் மோகன் ராஜா, ரீமேக் ராஜா என்ற பெயரை மாற்றவே இந்த சொந்த ஸ்க்ரிப்டை இரண்டு வருடங்களாக உருவாக்கி படமாக்கியதாக கூறினார். 

பலரும் படம் குறித்து நல்ல விமர்சனங்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துவரும் நிலையில் இயக்குநர் கௌதம் மேனன் தனது பாராட்டுகளையும் படம் குறித்த கருத்துகளையும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ’தனி ஒருவன் படத்திற்காக வாழ்த்துகள் இயக்குநர் ராஜா, பார்வையாளர்களை நிர்பந்தப்படுத்தாமல், கதையுடன் ஒன்றச் செய்து கட்டிப்போட்டுவிட்டீர்கள்.

உங்கள் பாதையில் நீங்கள் ஒரு படம் கொடுத்திருப்பது சிறப்பு.இதற்காக நான் என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தருணம் இது. என்று கௌதம் மேனன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க