வெளியிடப்பட்ட நேரம்: 18:11 (05/09/2015)

கடைசி தொடர்பு:17:38 (07/09/2015)

மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத ஜெயம்ரவி, மோகன்ராஜா!

ஜெயம் ரவி நடிப்பில் அவரின் அண்ணன் மோகன்ராஜா இயக்கத்தில் நயன்தாரா, அரவிந்த்சாமி, தம்பிராமையா, நாசர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றிருக்கும் படம் தனிஒருவன்.

இப்படத்திற்கான வெற்றிவிழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜெயம்ரவியும், மோகன்ராஜாவும் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதனர்.

நிகழ்ச்சியில் மோகன்ராஜா பேசும்போது, “ என்னிடம் வரும் ஹீரோக்கள் அனைவருமே ரீமேக் படம் எடுக்குறீங்க என்றால் நடிக்க தயார் என்றே கூறினார்கள். இத்தனை படங்கள் எடுத்தும் இயக்குநராக என்னை யாரும் நம்பவில்லை. நான் புத்திசாலியெல்லாம் கிடையாது. என்னுடைய உழைப்பை மட்டும் தான் இந்தப் படத்திற்கு விதைத்தேன். அதன் அறுவடையாகத்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது” என்றார்.

மோகன்ராஜா பேசும்போதே கண்ணீர்விட,  ஜெயம்ரவியும் மேடையிலேயே கண்ணீர்விட்டு அழுதார். வேதனை, கஷ்டங்களைக் கடந்த அவர்களின் வெற்றி இந்த கண்ணீரின் மூலம் உண்மையானது.

நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய ஜெயம்ரவி, “ என்னோட வெற்றியைப் பார்த்து தான் அண்ணன் சந்தோஷப்பட்டிருக்கிறார். இப்போ அவரோட வெற்றியைப் பார்த்து நான் சந்தோசப்படுகிறேன்.

ஜெயம் படம் என்னுடைய நுழைவுச் சீட்டு மாதிரி. தனிஒருவன் என் நெஞ்சில் குத்திய பச்சை மாதிரி. என் உயிர், உடல் உள்ளவரைக்கும் என் நெஞ்சிலேயே இருக்கும். என் அண்ணன் ரொம்ப சீரியஸான பட இயக்குநர் என்பதை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். அவரை நினைக்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது.

இந்தப் படத்தில் உடன் நடித்த நடிகர்கள் முதல் படத்திற்கு பின்னால் உழைத்த அனைவருக்கும் தன் நன்றியைக் கூறினார் ஜெயம்ரவி.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க