வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (07/09/2015)

கடைசி தொடர்பு:18:15 (07/09/2015)

அஜித்துக்கு நான் நடிப்பதில் விருப்பமில்லை - ஷாமிலி பதில்

 ஷாலினியின் தங்கையும் அஜித்தின் மைத்துனியுமான ஷாமிலி பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிக்க முக்கியமான சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.  துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் இரெண்டு வேடத்தில் நடிக்கும் படத்தில் ஷாமிலி ஒரு தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். 

அதே போல் விக்ரம் பிரபுவின் வீர சிவாஜி படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். 2009ல் ஓய் என்னும் தெலுங்கு படத்தில் சித்தார்த் ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானவர் தற்போது 6 வருடங்கள் சென்று மீண்டும் நாயகியாக நடிக்க உள்ளார். குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருதைத் தட்டிய ஷாலினி பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கியிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஷாமிலி ,உங்கள் நடிப்புக்கு அஜித்தும் ஷாலினியும் எப்படி சப்போர்ட் செய்கிறார்கள் என்ற கேள்விக்கு உண்மையில் அஜித்துக்கு நான் நடிப்பதில் விருப்பமில்லை. எனினும் நான் நடிக்க வேண்டும் என்ற ஆசையை சொன்னவுடன் அதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

நான் போட்டோ எடுக்க வேண்டும் என கூறியவுடன் அதற்கு அவரே ஆவன செய்து என்னை புகைப்படங்கள் எடுத்தார் எனக் கூறியுள்ளார் ஷாமிலி. எனக்கு மாடர்னாக நடிப்பதில் ஆர்வம் அதிகம் ஆனால் கிளாமராக நடிப்பதில் ஆர்வமில்லை எனவும் பதிவு செய்துள்ளார். 

ஆடியோ வடிவில் கேட்க:

நீங்க எப்படி பீல் பண்றீங்க