ரஜினி படத்தில் நடிக்கிறார் கிஷோர்?

கபாலி படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சிலநாட்களே இருக்கின்றன. அதற்காக சென்னையில் இரண்டுஇடங்களில் செட் அமைக்கும் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.

இந்தப்படத்தில் ரஜினியோடு ராதிகாஆப்தே, அட்டகத்திதினேஷ், கலையரசன் உட்பட பலர் அந்தப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்கள்.

இவர்களோடு முக்கியவேடமொன்றில் ஆடுகளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ்ரசிகர்களிடையே நல்லஅறிமுகத்தைப் பெற்றிருக்கும் கன்னடநடிகர் கிஷோர் ஒப்பந்தமாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அவர் கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்தியமொழிகள் எல்லாவற்றிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

தற்போது மலையாளத்தில் மோகன்லால் படத்தில் முக்கியவேடத்தில் நடித்துவருகிறார்.     

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!