கேவி.ஆனந்தின் அடுத்த ஹீரோ?

அனேகன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் பற்றிப் பல்வேறு செய்திகள் வந்துவிட்டன.  அடுத்து அவர் அஜித் படத்தை இயக்கப்போகிறார், விஜய் படத்தை இயக்கப்போகிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

இரண்டுநாட்களுக்கு முன்பு அவர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்கப்போகிறார் என்று செய்திகள் வந்தன. உடனே அதை மறுத்துவிட்டார் கே.வி.ஆனந்த்.

மறுத்ததோடு இந்தச்செய்தியைப் படித்தால் சிவகார்த்திகேயன் மட்டுமல்ல அந்த ஹீரோவும் டென்ஷனாகிவிடுவார் என்று சொல்லியிருந்தார் கே.வி.ஆனந்த்.

யார் அந்த ஹீரோ? என்று அவர் சொல்லவில்லை, குறிந்த பட்சம் ஒரு க்ளூ கூடக் கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் இப்போது பேசிக்கொண்டிருக்கும் ஹீரோ ஆர்யா என்றும் அந்தப்படம் தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது. இதுவாவது உண்மையா?   
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!