5 மொழிகளில் ரீமேக் ஆகவிருக்கும் தனி ஒருவன்!

 மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி , அரவிந்த் சாமி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் தனி ஒருவன். படத்திற்கு நல்ல வசூல் அதை விட முக்கியமாக நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் படத்தை சமீபத்தில் பார்த்த பாலிவுட் டாப் ஸ்டார் சல்மான் கான் படம் குறித்து நல்ல கருத்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். 

அதே போல் ராம் சரணுக்கும் படம் பிடித்துப் போக தற்போது தெலுங்கில் ரீமேக் வேலைகள் விரைவில் நடைபெற உள்ளன. சல்மான் கானும் கொஞ்சம் காத்திருப்பில் வைத்திருப்பதால் சல்மான் கான் நடிக்க மோகன் ராஜா பாலிவுட்டிலும் தனி ஒருவன் படத்தை ரீமேக் செய்வார் என்றே தோன்றுகிறது. 

இப்படம் குறித்த ஒரு சந்திப்பின் போது மோகன் ராஜா பேசுகையில் தெலுங்கு, இந்தி தவிர்த்து கன்னடம், மராத்தி, மற்றும் பெங்காலி மொழிகளிலும் இந்தப்படத்தை எடுக்கப் பேச்சு வார்த்தை நடந்துவருவதாகவும், கன்னடத்தில் புனித் ராஜ் குமார் ஆர்வம் காட்டியுள்ளார் எனவும் , மராத்தியில் நடிக்க ஜெனிலியாவும் அவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் பகிர்ந்துள்ளார். 

இது நடந்தால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தமிழ் படம் 5 மொழிகளில் ரீமேக் ஆகிறது எனலாம். பொறுத்திருந்து பார்ப்போம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!