வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (08/09/2015)

கடைசி தொடர்பு:15:18 (08/09/2015)

சென்சார் முடிந்தது, ரிலீஸூக்குத் தயாராகிறது ரஜினிமுருகன்

 பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினிமுருகன் படம் விநாயகர்சதுர்த்தியன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒருநாள் விநாயகர்சதுர்த்தி என்று விளம்பரம் செய்துவிட்டு அதன்பின் விரைவில் படம் வெளியாகும் என்று விளம்பரம் செய்கிறார்கள்.

அற்கும், செப்டம்பர் 17 என்று சொல்லாமல் விநாயகர்சதுர்த்தி என்று சொன்னதற்கும் காரணம், இன்னும் தணிக்கைச்சான்றிதழ் பெறவில்லை என்பதுதானாம். இந்நிலையில் இந்தப்படத்தை இன்று தணிக்கைக்குழுவினர் பார்த்திருக்கிறார்கள். படத்துக்கு யு சான்றிதழ் கொடுத்ததோடு படம் பற்றி பாராட்டியும் சொன்னார்களாம்.

படத்துக்கு ஒரு கட் கூட இல்லையென்றும் சொல்லப்படுகிறது. இதனால் இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம். படம் யு சான்றிதழ் பெற்றுவிட்டதால் செப்டம்பர் 17 வெளியீடு என்பது உறுதியாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.  

 
 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்