வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (08/09/2015)

கடைசி தொடர்பு:15:58 (08/09/2015)

பெயரே அறிவிக்கப்படவில்லை, அதற்குள் பெரும் தொகைக்கு விலை போன ’தல 56’

 வீரம் சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் சூரி நடித்துவரும் படம் அஜித்தின் 56வது படம். படப்பிடிப்புகள் நடந்துவரும் நிலையில் இன்னும் தலைப்பு அறிவிக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில் வியாழன் செண்டிமெண்ட் காரணமாக செப்டம்பர் 17ம் தேதி அஜித் படம் குறித்த தலைப்பு மற்றும் சிறப்புச் செய்தி வெளியாகும் என படத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் படத்திற்கு பெயரே இனிதான் அறிவிக்கப்பட இருக்கிறது அதற்குள் படத்தை வெவ்வேறு விநியோகஸ்தர்கள் முறையே பெருந்தொகைகளுக்கு வாங்கியுள்ளனர். மேலும் ஏ.எம்.ரத்னம் அஜித் காம்பினேஷனில் என்னை அறிந்தால் படம் வெளியாவதற்கு முன்னரே 49 கோடிகளுக்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

தற்போது அதை விட அதிக அளவில் விற்பனையாகியுள்ளது என தகவல்கள் கசிந்துள்ளன. தீபாவளி சிறப்பாக தல56 படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் வேலைகள் விரைந்து நடந்துவருகிறது. படத்தின் டீஸரும் ,இசை மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்புகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க