Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹரியின் சிங்கம் 3 ஆன் தி வே?

இயக்குநர் ஹரி - சூர்யா கூட்டணியில் வெளியாகி ஹிட் அடித்த படங்களான சிங்கம், சிங்கம் 2 படங்களின் அடுத்தபாகமாக சிங்கம் 3  படத்திற்கான வேலைகளை படக்குழுவினர் தொடங்கிவிட்டனர்.

சிங்கம் மூன்றாம் பாகத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.  முந்தைய பாகங்களில் பணிபுரிந்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், ஒளிப்பதிவாளர் பிரியன் ஆகியோர்களே இப்படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சிங்கம் முதல் பாகம் கோடை விடுமுறையில் வெளியாகி ஹிட் அடித்ததால் மூன்றாம் பாகத்தையும் அடுத்த வருட கோடைவிடுமுறைக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் ஹரி திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

தற்பொழுது சூர்யா நடித்துவரும் 24 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், நவம்பரில் சிங்கம் 3 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரியவருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்