சிக்கலில் இருக்கிறதா கார்த்தி படம்?

  ரௌத்திரம், இதற்குத்தானேஆசைப்பட்டாய்பாலகுமாரா ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா நடிப்பில் தொடங்கப்பட்ட படம் கஷ்மோரா. இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஐம்பது விழுக்காடு நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன்பின் நகராமல் அப்படியே இருக்கிறதாம்.

அதற்குக் காரணம், இதுவும் பேய்ப்படம் என்றும், இதற்கு சிஜி வேலைகள் அதிகம் இருக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது.

அதோடு, இந்தப் படம் அடுத்தவருடம்தான் வெளியிடப்படும் என்பதால், தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடத்தாமல் அவ்வப்போது நடத்திக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் இந்தப்படத்தின் இரண்டாம்பாதிக்கதையைப் படமாக்கினால் திட்டமிட்டதைவிட அதிகச் செலவாகும் என்று தெரிகிறதாம். அதனால்,  இரண்டாம்பாதிக்கதையில் மாற்றங்கள் செய்யவேண்டும் என்று தயாரிப்பாளர்தரப்பு விரும்புவதாகப் பேச்சு இருக்கிறது, இதுபற்றிப் படக்குழுவினரிடம் கேட்டால், இது முற்றிலும் தவறான தகவல், படம் தொடங்கியதிலிருந்து எங்கள் திட்டப்படி சரியாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். விரைவில் அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!