திமிரோடு இருக்கிறீர்கள் என்று ராஜ மௌலியை நேரடியாகப் போட்டுத் தாக்கிய ராம் கோபால் வர்மா!

ட்விட்டரில் அடிக்கடி ஏதேனும் சர்ச்சையாக ட்வீட் செய்து அவ்வப்போது பரபரப்பாக்குவது ராம் கோபால் வர்மாவின் வேலை. சமீபத்தில் ஆசிரியர் தினம் அன்று ’நான் ஹேப்பி டீச்சர்’ஸ் டே சொல்லி இந்த ஒரு நாளை மட்டும் கொண்டாட மாட்டேன். நான் இன்று சந்தோஷமாக இருக்கக் காரணம் என் ஆசிரியர்கள் தான் என்றார். 

இதற்கு ராஜமௌலி நீங்கள் தான் எங்கள் ஆசிரியர் என ட்வீட் போட்டார். அதற்கு ராம் கோபால் வர்மா இன்னொரு ட்வீட்டில் ’SS ராஜமௌலி என்பதில் SS என்பதற்கு என்ன அர்த்தம் என இப்போதுதான் எனக்கு தெரியவந்தது. SS என்பது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் என ட்வீட் போட்டிருந்தார். அதற்குப் பதிலளித்து ராஜ மௌலி போட்டிருந்த பதிவில், 

 ‘ மக்களிடம் இப்போது என்னை திட்டு வாங்க வைக்க வேண்டியது அவசியமா’? எனக் கேட்டவர் கூடவே கையெடுத்து கும்பிடும் படியான ஸ்மைலி குறி ஒன்றையும் போட்டிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, ராம் கோபால் வர்மா,  'அடக்கத்துக்கு அப்பாலும் ஒரு எல்லையில் திமிர் இருக்கிறது சார்' என கவுண்ட்டர் கொடுத்தார். அதோடு ராஜமௌலி கப்சிப் ஆனார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!