குழப்பத்தை ஏற்படுத்திய ஷாமிலிகள்!

 ஷாலினியின் தங்கையும், நடிகையுமான ஷாமிலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் இரண்டு வேடத்தில் நடிக்கும் படத்தில் ஒரு தனுஷுக்கு ஜோடியாக ஷாமிலி நடிக்கிறார். 

விக்ரம் பிரபுவின் வீர சிவாஜி படத்திலும் நாயகி ஷாமிலி தான். இந்நிலையில் இவர் குறித்து செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. அதில் தான் குழப்பமே. அஞ்சலி பாப்பாவாக நடித்த இந்த ஷாமிலிக்கு பதில் இன்னொரு ஷாமிலினியின் புகைப்படங்களை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். 

ஷாமிலி அகர்வால் என்ற இன்னொரு நடிகை ஹைதரபாத்தின் மாடல், மற்றும் தெலுங்கு நடிகை. இவரது சாயலும், அஞ்சலி பட ஷாமிலியும் ஓரளவு ஒத்திருப்பதே குழப்பத்திற்கு காரணம் எனலாம். பலரும் ஷாமிலி என ஷாமிலி அகர்வாலின் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். உண்மையில் புகைப்படத்தில வலது பக்கம் இருப்பவர் ஷாமிலி அகர்வால் . இடது பக்கம் கருப்பு நிற உடையில் இருப்பவரே பேபியாக கலக்கிய அஜித் மைத்துனி ஷாமிலி. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!