படமாகிறது திப்பு சுல்தான் கதை, ஹீரோவாக ரஜினி!

திப்பு சுல்தான் வாழ்க்கை சினிமாவாக உருவாக இருக்கிறது. சமீபகாலமாக சரித்திர படங்களுக்கு கொஞ்சம் அதீத வரவேற்புகள் உருவாகியுள்ளன. தமிழில் பாகுபலி படம் 500 கோடிகளை வசூலித்தது நாமறிந்ததே. அதே பாணியில் இந்தியில் பஜிராவோ மஸ்தாணி என்னும் பெயரில் மாராட்டிய மன்னனாக ரன்வீர் சிங் மற்றும் ஹீரோயின்களாக தீபிகா படுகோனே, ப்ரியங்கா சோப்ரா நடிக்க பிரம்மாண்டமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திப்பு சுல்தான் வாழ்க்கையை படமாக எடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. படத்தை பிரம்மாண்ட பொருட்செல்வில் எடுக்க அசோக் கெனி முடிவு செய்துள்ளார். இவர் கன்னடத்தின் மிகப்பெரிய தயாரிப்பாளர். இந்தக் கதையின் நாயகன் திப்பு சுல்தானாக நடிக்க ரஜினிதான் சரியான நடிகர், ரஜினியை சந்தித்து சில வருடங்கள் முன்பு இது குறித்து பேசினேன்.

அப்போது அவர் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் படவேலைகள் ஆரம்பிக்கப்படாமல் இருந்தன. தற்போது மீண்டும் படத்தை துவங்க உள்ளேன். ரஜினியை மீண்டும் சந்தித்து பேசிய பிறகு அதிகாரப் பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனுக்கு கப்பல்களை பரிசாக அளித்தவர் திப்பு சுல்தான். அவரது கேரக்டரில் ரஜினி நடிப்பது சந்தோஷமான விஷயம். எனத் தெரிவித்துள்ளார் அசோக் கெனி. 

எனினும் ரஜினியின் மகள் தனது அனிமேஷன் படத்திற்கு முதலில் வைத்த பெயர் சுல்தான் தி வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!