ரஜினிமுருகன் எப்போது வெளியாகும்?

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினிமுருகன், செப்டம்பர் 17 அன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் தேதியில் படம் வெளியாகாது என்று பரவலாகச் சொல்லப்படுகிறது.

படநிறுவனம் கொடுக்கும் விளம்பரங்களிலும் தேதி குறிப்பிடப்படவில்லை என்பதால் அந்தத் தேதியில் வெளியாகாது என்று தெரிகிறது. அப்படியானால் அந்தப்படம் எப்போது வெளியாகும்? இந்தத்தேதியை அடுத்து நான்குநாட்கள் வசூல் கிடைக்கிற தேதி அக்டோபர் 1 தான்.

அந்தத் தேதியில் புலி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அதையடுத்து நிறைய விடுமுறைநாட்கள் உள்ள தேதி ஆயுதபூசை சமயம்தான். ஐந்துநாட்கள் வசூல் பெரிதாக இருக்கும் என்பதால் அந்தத் தேதியில் ரஜினிமுருகனை வெளியிடத் திட்டமிடுவதாகச் சொல்லப்படுகிறது. அதற்குள் இருக்கும் சிக்கல்களையெல்லாம் சரிசெய்துவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!