வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (14/09/2015)

கடைசி தொடர்பு:16:15 (14/09/2015)

சூர்யா படத்துக்கு இவ்வளவு விலையா?

சூர்யா இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் 24. விக்ரம்குமார் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் பாடல்காட்சிகளைப் படமாக்க போலந்து போகவிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் தெலுங்குஉரிமையை தெலுங்கு நடிகர் நிதின் வாங்கியிருக்கிறார் என்று முன்பே சொல்லப்பட்டது. அவர் இந்தப்படத்தின் தெலுங்கு உரிமைக்காக சுமார் இருபது கோடி கொடுக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது இதுவரை இல்லாத அளவு பெரியதொகை என்றும் சொல்லப்படுகிறது.

சூர்யாவின் எல்லாப்படங்களுமே தமிழில் வெளியாகும்போதே தெலுங்கிலும் வெளியாகும். கடைசியாக வெளியான மாஸ் மற்றும் அஞ்சான் ஆகியவை சரியாகப் போகாதநிலையிலும் சூர்யா படம் இவ்வளவு விலைக்குப் போயிருப்பது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

சூர்யா மட்டுமின்றி இயக்குநரும் தெலுங்கில் புகழ்பெற்றவர் என்பதாலும் அவருடைய முந்தைய படங்கள் வெற்றிகரமாக ஓடியிருக்கின்றன என்பதாலுமே இவ்வளவு விலை கொடுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்