வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (15/09/2015)

கடைசி தொடர்பு:16:13 (15/09/2015)

உடலைப் பற்றிக் கவலைப்படாத அஜித்

கதாநாயகர்களுக்குக் காவல்துறைஅதிகாரி வேடத்தில் நடிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அந்தவேடத்தில் நடிக்க உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவேண்டும். எனவே கடுமையான உடற்பயிற்சிகள் செய்து சிக்ஸ்பேக் எல்லாம் வைத்துக்கொண்டு நடிப்பார்கள்.

ஒருபடத்தில் காவல்துறைஅதிகாரி வேடம் என்றாலே உடனடியாக எல்லோரும் இப்படித்தான் தயாராவார்கள். அதிலிருந்து மாறுபட்டு காவல்துறைஅதிகாரி வேடம் என்றாலும் அலட்டிக்கொள்ளாமல் அப்படியே இருக்கும் நடிகர்களைப் பற்றிய தகவலைச் சொன்னார் சக்திவேல்வாசு. இயக்குநர் பி.வாசுவின் மகன்தான்.

அவர் காவல்துறைஅதிகாரியாக நடித்திருக்கும் தற்காப்பு படவிழாவில் பேசும்போது, போலிஸ்கேரக்டர்னா கடுமையா ஒர்க்அவுட் பண்ணி சிகஸ்பேக் வைக்கணும்னு தான் எல்லோரும் நினைப்பாங்க, என்னிடமும் டைரக்டர், இந்தக்கேரக்டருக்கு ரொம்ப கரெக்டா உடம்பை வெச்சிருக்கணும்னு சொன்னார், நான் என்னால் முடிஞ்சவரை செய்கிறேன் என்று சொல்லிவிட்டுச் செய்தும் இருக்கிறேன், அது நன்றாக அமைந்திருக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

நாம சினிமாவில் இதுவரைக்கும் தங்கப்பதக்கம் சிவாஜி, வால்டர்வெற்றிவேல் சத்யராஜ் உட்பட எவ்வளவோ பேரைப் பார்த்திருக்கோம், எல்லோருமே உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள். ஆனால் அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் இருக்கிற உடம்போடு போலிஸாக நடித்தவர்கள் இரண்டே பேர்தான்.

ஒண்ணு அஜித், அடுத்து கார்த்தி. சிறுத்தையில் அப்படியே சின்னத்தொப்பையோட நடிச்சிருப்பார். உடலைப் பற்றிக் கவலைப்படாமல் நடிச்சாங்க. இவங்கதான் உண்மையான தமிழ்நாட்டுபோலிஸ். அவங்களை மக்களும் ஏத்துகிட்டாங்க என்று பேசினார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க