வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (16/09/2015)

கடைசி தொடர்பு:10:56 (16/09/2015)

ரஜினி முதலிடம்,தனுஷ் இரண்டாமிடம்- இது என்ன பட்டியல்?

   தமிழ்த்திரைப்பட நடிகர்களை ஆளாளுக்கு வரிசைப்படுத்தி இவர்தான் நம்பர் ஒன் இவர் அதற்குப்பிறகுதான் என்று சொல்வார்கள். இது அவ்வப்போது நடக்கும். சமுகவலைதளங்கள் வந்தபிறகு இது அதிகரித்திருக்கிறது. அண்மையில், சமுகவலைதளமான டிவிட்டரில் எந்த நடிகருக்கு அதிகமான பின்தொடருகிறவர்கள் இருக்கிறார்கள் என்கிற பட்டியல் வந்திருக்கிறது.

அந்தப்பட்டியலில் முதல்இடத்தில் இருப்பவர் ரஜினி. அவரை 22 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடருகின்றனர். அவருக்கு அடுத்தஇடத்தில் தனுஷ் இருபது இலட்சம் பேருடன் இருக்கிறார். மூன்றாவதாக சித்தார்த் பதினேழு இலட்சம் பேருடனும், நான்காவதாக சிவகார்த்திகேயன் பனிரெண்டுஇலட்சம் பேருடனும் இருக்கிறார்கள்.

சூர்யா, விஜய் எல்லாம் மிகவும் பின்னால் இருக்கிறார்கள். கமல், அஜித் போன்றோர் இந்தப்பட்டியலிலேயே இடம்பெறவில்லை. ஏனெனில் அவர்கள் டிவிட்டரிலேயே இல்லை.   

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்