வெளியிடப்பட்ட நேரம்: 13:31 (16/09/2015)

கடைசி தொடர்பு:13:42 (16/09/2015)

ஆரவாரமா? சரவெடியா? இழுபறியில் அஜித் படப்பெயர்?

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதியபடத்துக்குப் பெயர் வைப்பது இன்னும் முடிவடையவில்லை. அநேகமாக நாளை விநாயகர்சதுர்த்தியை ஒட்டி படத்தின் பெயரை அறிவிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.

படத்துக்கு என்ன பெயர் வைப்பது? என்று இன்னமும் அவர்களே முடிவுசெய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆரவாரம் என்கிற பெயர் வைக்கலாம் என்று பேச்சு வந்தது. அந்தப்பெயரை வேறொருவர் பதிவு செய்திருந்தாராம். அவரிடருந்து ஒரு தொகை கொடுத்து அந்தப்பெயரை வாங்கிவிட்டார்களாம்.

அதன்பின்னரும் ஒத்தகருத்து ஏற்படாததால், அந்தப்பெயர்தான் என்று உறுதியாகவில்லை என்றே சொல்லப்படுகிறது. இப்போது பெயர்ப்பட்டியலில் ஆரவாரம் மற்றும் சரவெடி ஆகிய பெயர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவ்விரண்டில் ஒன்றுதான் பெயராக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இது தவிர வி என்கிற ஆங்கில எழுத்தில் தொடங்குகிற பெயரும் பட்டியலில் இருக்கிறதாம். இவற்றில் எதை முடிவு செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்