வெளியிடப்பட்ட நேரம்: 13:34 (16/09/2015)

கடைசி தொடர்பு:14:46 (16/09/2015)

நான் தான் முதலில் காதலை வெளிப்படுத்தினேன்...பிரியாமணிக்கு விரைவில் திருமணம்!

’உள்ளம்’ என்னும் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரியாமணி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு,கன்னடம் என பல படங்களில் நடித்துள்ளார். பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் அறியப்பட்டவர் அமீரின் ‘பருத்தி வீரன்’ படம் மூலம் தேசிய விருதையும் வென்று முன்னணி நடிகையானார். அதைத்தொடர்ந்து தமிழ் , தெலுங்கு என ப்ரியாமணி பல டாப் ஹீரோக்களுடன் நடித்தார்.

தற்போது திருமணம் செய்யும் முடிவுக்கு வந்துள்ளார் பிரியாமணி. தொழிலதிபரும் , பிரியாமணியின் நீண்ட கால நண்பரும் ஆன முஸ்தபா ராஜை மணக்க இருக்கிறார். நான் தான் என் காதலை முதலில் வெளிப்படுத்தினேன் எனக் கூறிய பிரியாமணி, இப்போதுவரை அந்த நிகழ்வை அவர் நான் ஜோக் அடித்ததாகவே நினைத்ததாக கூறுவார் என முஸ்தபா குறித்தும் அவருடனான காதல் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளின் போதுதான் நான் அவரை சந்தித்தேன்.

பழகிய கொஞ்ச நாட்களுக்குப் பிறகுதான் எங்களுக்குள் இருப்பது நட்பையும் கடந்த ஏதோ ஒரு பந்தம் என்பது எனக்கு புரிந்தது. பின்னர் இருவருமே அதை உணரத் துவங்கினோம். மேலும் நான் கோபப்படுவதையோ அல்லது வருந்துவதையோ கொஞ்சமும் விரும்பாத மனிதர் முஸ்தபா. நான் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார்.  

எனது பிரச்னைகள் எதுவாக இருப்பினும் என்னுடன் நிழலாக நிற்பவர் , நல்ல நகைச்சுவரை உணர்வும் அவரிடம் உள்ளது என முஸ்தபா குறித்து கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் பிரபல கன்னட ரியாலிட்டி நிகழ்ச்சியான டி2 டி4 டான்ஸ் நிகழ்ச்சியில் முஸ்தபாவுக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பிரியாமணி. சரண்யா மோகன், சாந்தனு ,அசின் லிஸ்டில் தற்போது பிரியாமணியும் இணைய இருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க