த்ரிஷா இல்லனா நயன்தாரா நாளை ரிலீஸ்!

ஜி.வி.பிரகாஷ், மனிஷா, ஆனந்தி நடிப்பில் வெளியாகவிருக்கும் படம்  'த்ரிஷா இல்லனா நயன்தாரா'. இப்படத்தின் தயாரிப்பாளர் சி.ஜெ.ஜெயக்குமார், ஆனந்த விகடன் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.75 லட்சம் வரை பாக்கி தர வேண்டியிருந்தது.

தரவேண்டிய தொகையை  தராததால் இப்படத்தின் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதற்கான வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு வந்தது.

படத்தின் தயாரிப்பாளர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி தரவேண்டிய நிலுவைத் தொகையை தந்துவிட்டதால் மதியம் ஒருமணிக்கு வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

எனவே த்ரிஷா இல்லனா நயன்தாரா எந்தப் பிரச்னையும் இல்லாமல் நாளை வெளியாகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!