பாலா படம் முடிந்த அடுத்தநாளே புதியபடம், சசிகுமார் அதிரடி

பாலா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் தாரைதப்பட்டை படத்தின் படப்பிடிப்பு நேற்றுத்தான் முடிவடைந்தது. இடையில் இன்று ஒருநாள் தான். நாளை  புதியபடத்தின் படப்பிடிப்பைத் தொடங்குகிறாராம் சசிகுமார்.

ஜில்லா படத்தில் இணைஇயக்குநராகப் பணியாற்றிய வசந்தமணி என்பவருடைய இயக்கத்தில் சசிகுமார் நடிக்கவிருக்கிறாராம். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நாளை விநாயகர்சதுர்த்தியன்று தொடங்கவிருக்கிறதாம்.

சுப்பிரமணியபுரம் உட்பட சசிகுமாரின் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பும் தஞ்சாவூரிலேயே தொடங்கவிருக்கிறதாம். நேற்றுவரை பாலாவின் தாரைதப்பட்டை படப்பிடிப்பும் அங்குதான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் கூட ஓய்வெடுக்காமல் அடுத்த படப்பிடிப்பை சசிகுமார் உடனே தொடங்கக் காரணம், தாரைதப்பட்டை படப்பிடிப்பில் சசிகுமாருக்கு கையில் அடிபட்டு படப்பிடிப்பு தடைபட்டது. அதனால் இந்தப்படமும் திட்டமிட்டதைவிடத் தாமதம் ஆகிவிட்டது. மேற்கொண்டு தாமதம் செய்யவேண்டாம் என்பதாலேயே உடனே படத்தைத் தொடங்குகிறார்களாம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!