வெளியிடப்பட்ட நேரம்: 16:18 (16/09/2015)

கடைசி தொடர்பு:18:04 (16/09/2015)

தூங்காவனம் டிரெய்லர் வெளியீடு...கலக்கல் சேலையில் த்ரிஷா!

 தூங்காவனம் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை நிகழ்ச்சி தற்சமயம் நடந்துவருகிறது. இந்நிலையில் த்ரிஷா தூங்காவனம் டிரெய்லர் நிகழ்ச்சிக்கு அழகிய சேலையில் வந்துள்ளார். இந்த சேலை பிரபல ஆடை வடிவமைப்பாளர் வருண் பாலால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

வெளிர் சந்தன நிறத்தில் பூ போட்ட சேலையில் பூக்கள் ப்ரிண்ட் செய்யப்பட்ட ப்ளவ்ஸும் அஸ்தக் ஜக்வானியால் டிசைன் செய்த கல் பொருத்தப்பட்ட தோடும் என த்ரிஷாவின் இந்த புகைப்படம் இணையத்தில் சுற்றிவருகிறது.

வருன் பாலின் எந்த ஒரு சாதரண உடையும் ஆரம்ப விலை 15 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் த்ரிஷாவின் கிராண்டான சேலை குறைந்த பட்சம் 50,000 முதல் 1.50 லட்சத்தைத் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வருண் பால் த்ரிஷா மட்டுமின்றி பல நாயகிகளின் சினிமா நிகழ்ச்சிகளுக்கான பிரத்யேக ஆடை வடிவமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரிஷா தூங்காவனம் டிரெய்லர் நிகழ்ச்சிக்காக தயாராகிவிட்டார் என்பதை தெரிவித்துள்ளார் மேக்கப் ஆர்டிஸ்ட் நீரஜா கோனா. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க