விக்ரம் படத்தில் கமலைப் புகழ்ந்து பாடல்

  விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்திருக்கும் படம் பத்துஎண்றதுக்குள்ள. இந்தப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்தப்படத்தின் ஒருபாடல் வெளிவந்திருக்கிறது.

பேரக்கேட்டா பேஜாரு பண்றே என்று தொடங்கும் அந்தப்பாடலில், ஜேம்ஸ்பாண்டு, விராட்கோலி ஆகியோரைப் பற்றிய பெருமைகரளச் சொல்லிவிட்டு மூன்றவதாக கமல்ஹாசனின் பெருமைகளைப் பேசியிருக்கிறார்கள். என் ஓரு பரமக்குடி, நான் யாரு கண்டுபிடி, முத்தவித்தை அத்துப்படி, எங்கிட்ட கத்துக்கடி, படிப்புக்குப் போகல டியூசன், ஆனா நடிப்பலு நானொரு ஓசன், புதுமைகள்தான் என் பேஷன், என்னோட பேரு ஹாசன், கமல்ஹாசன் என்று கமலைப் புகழ்ந்து பாடல்வரிகள் இருக்கின்றன.

படத்தில் எந்தஇடத்தில் இந்தப்பாடல் வருகிறது, யார் நடித்திருக்கிறார் என்று தெரியவில்லை, இருந்தாலும் தமிழ்த்திரையுலகில் ஒரு முன்னணிநாயகனின் படத்தில் இன்னொரு முன்னணிநாயகன் புகழ்பாடும் பாடல் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!