வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (19/09/2015)

கடைசி தொடர்பு:16:58 (19/09/2015)

புலி செய்த புதியசாதனை

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் புலி படத்தின் முன்னோட்டம் நிறைய விருப்பங்களைப் பெற்று, இந்தியஅளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்திருந்தது. சல்மான்கானின் கிக் 2 படம் முதலிடத்தில் இருந்தது.

நேற்று அந்தப்படத்தையும் தாண்டி முன்னணிக்கு வந்துவிட்டது புலி படத்தின் முன்னோட்டத்திற்கான விருப்பங்கள். கிக்2 படம் 101855 விருப்பங்களுடன் இருக்கிறது. அதைத்தாண்டி புலி படம் 101968 விருப்பங்களைப் பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

அதேசமயம், அதைப்பார்த்தவர்கள் எண்ணிக்கையில் இன்னும் கிக்2 தான் முன்னணியில் இருக்கிறது. அதைத்தொடமுடியுமா? என்பது சந்தேகம்தான். அந்தஅளவுக்கு வித்தியாசம் இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க