சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்கள் தாக்குதல் முயற்சியா?

“சிவகார்த்திகேயனுக்கு மதுரை கமல் ரசிகர்கள் அடி. பெரும் பரபரப்பு” பிரபல நடிகர் சிவகார்த்திகேயனை இன்று காலை மதுரை விமான நிலையத்தில் கமல் ரசிகர்கள் அடித்ததாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்தபோது தன்னை ரஜினி ரசிகர் என்றும், கமல் குறித்து அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை ட்விட்டரில் விளாசி தள்ளி கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் விழா ஒன்றுக்காக மதுரை வருவதாக கேள்விப்பட்ட கமல் ரசிகர்கள் மதுரை விமான நிலையத்தின் வாசலில் காத்திருந்தனர். விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்த சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு கண்மூடித்தனமாக தாக்கியதாகவும், அவர்களை சிவகார்த்திகேயனின் பாதுகாவலர்கள் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு எதிராக கமல் ரசிகர்களும், கமல் ரசிகர்களுக்கு கண்டனம் தெரிவித்து சிவகார்த்திகேயன் ரசிகர்களும் ட்விட்டரில் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.எனினும் இதுகுறித்து சிவகார்த்திகேயன் தரப்பில் இல்லை எனவும் அவர் அவசரமாக விமான நிலையத்திலிருந்து வெளியேறியதால் ரசிகர்கள் தாக்குதல் முயற்சி போல் தெரிந்தது இந்தச் செய்தி வதந்தி எனவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ஒரு நடிகருக்கு இப்படி நடக்கலாமா என தங்களது ஆதரவையும், கமல் ரசிகர்களுக்கு கண்டங்களையும் தெரிவித்ததோடு, சிவகார்த்திகேயன் ரசிகர்கள்  #WeSupportSivaKarthikeyan என ட்ரெண்ட் செய்து தங்களது ஆதரவுகளை தெரிவித்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!