Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இளங்கன்று பயமறியாது என்பது போல நடந்துகொண்ட கமல்

திருச்செந்தூரில் பா.சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் நிறுவப்பட்ட அவரது உருவச்சிலையை திறப்பு விழாவிற்கு கமல்ஹாசன், ஹன்சிகா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் கலந்துகொண்ட கமல்ஹாசன் கூறும் போது, “ பாலசுப்பிரமணிய ஆதித்தனாரின் தாத்தாவை நான் சின்ன பையனாக இருந்த போது பார்த்து உள்ளேன். இவர்தான், தமிழனுக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர்.

அவருக்கு பிறகு அடுத்த தலைமுறையாக உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ள ஒரு நடிகனாய், ‘‘இளம் கன்று பயம் அறியாது’’ என்பது போல், அப்போது சிவந்தி ஆதித்தனாரிடமே நேரில் சென்று, ‘‘நீங்கள் உடம்பை எப்படி வைத்துக் கொள்கிறீர்கள்?’’ என்று கேட்பேன். அவரும் ஆலோசனை தருவார், அந்த நிகழ்வுகளை இன்றும் என்னால் மறக்கமுடியாது.

இந்த நிகழ்வுகள் நட்பு என்பதைக் காட்டிலும் அவருக்கு என் மேல் உள்ள அன்பு தான் காரணம். அடிக்கடி அவரிடம் கராத்தே பற்றியும், உடற்பயிற்சி பற்றியும் சந்திக்கும் போதெல்லாம் கேட்பேன். அப்போது அவரை ஓர் பணக்காரராக மட்டும் தான் தெரியும்.

ஆனால் இரண்டாம் தலைமுறையாக இருந்து அவரின் பொறுப்புகள், செய்யும் உதவிகள் வெளியே தெரியாமல் பணிவாக வாழ்ந்தவர், சிவந்தி ஆதித்தனார். இன்று மூன்றாம் தலைமுறையும் அதே அன்புடன், அதே மனித நேயத்துடன் ஏழை எளிய குடும்பங்களுக்காக உதவி செய்தும் வருகின்றனர்.  பரம்பரை பரம்பரையாக சி.பா.ஆதித்தனார் குடும்பம் மனிதநேயத்துடன் வாழ்ந்து வருவதை பார்த்து வியந்து நிற்கிறேன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
[X] Close