தனுஷ் மற்றும் வெற்றிமாறனை மனமாரப் புகழும் விஜய்

வெற்றிமாறன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், சமுத்திரக்கனி, உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வெளியாவதற்குள்ளாகவே பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்று வரும் படம் ‘விசாரணை’. இந்தப் படத்திற்கு தற்போது மீண்டும் ஒரு அங்கீரமாக இயக்குநர் விஜய் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இந்தப்படம் குறித்து அவர் கூறுகையில், விசாரணை படத்தை நான் அமெரிக்காவில் பார்த்தேன். இந்தியாவின் சிறந்த படங்களில் இந்தப் படமும் ஒன்று. வெற்றி மாறன் தனது அற்புதமான படைப்பை உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தைப் பார்த்து முடித்த கணம் என்னால் பேசமுடியவில்லை. கதையையும், திரைக்கதையையும், மேலும் கதாபாத்திரங்களையும் அவர் கையண்ட விதம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.

ஒவ்வொருவரும் இயல்பாக நடித்துள்ளனர். தினேஷ், சமுத்திரக்கனி, ராமலிங்கம் உள்ளிட்ட நடிகர்கள், மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என் மிகப்பெரிய பாராட்டுகள். எல்லா விதத்திலும் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும் படம் இது. உலக சினிமா ஆரங்கில் இந்தப் படம் இந்தியா சினிமாவுக்கான அடையாளமாக இருக்கும்.சினிமா துறையில் ஒருவனாக இருக்கும் எனக்கு இதை முன்கூட்டியே பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை நான் அதிர்ஷ்டமாக உணர்கிறேன். படம் வெளியாகும் தருவாயில் யாரும் இதை தவறவிட்டுவிடாதீர்கள் என விசாரணை படம் குறித்து கூறியுள்ளார் இயக்குநர் விஜய்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!