வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (22/09/2015)

கடைசி தொடர்பு:11:11 (22/09/2015)

அஞ்சலிக்கு எதிராக வதந்தி பரப்புவது யார்?

 அஞ்சலி நடித்துள்ள‘மாப்ள சிங்கம் படம் தயாராகிவிட்டது. இப்போது, தரமணி, இறைவி’ ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். தெலுங்கிலும் மூன்று படங்கள் கைவசம் உள்ளன.  

இந்நிலையில், ஒரு தொழில் அதிபரை அவர் காதலிப்பதாக கூறப்பட்டது. ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும் செய்திகள் வந்தன. இவர்களுக்கு குழந்தை இருப்பதாகவும் தகவல் பரவியது. இவற்றைக் கடுமையாக மறுத்திருக்கிறார்  அஞ்சலி.

 
எனக்குத் திருமணம் நடந்துவிட்டதாகவும், குழந்தை இருப்பதாகவும் வதந்திகளை பரப்புகிறார்கள். இது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. திருமணம் உடனடியாக செய்து கொள்ளமாட்டேன். என் முழுக்கவனமும் இப்போது சினிமாவில்தான் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.
 
அவருக்கு எதிராக வதந்திகளைப் பரப்புவது யார் என்பதை அவர் சொல்லவில்லை, திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள் என்றால் அதைச் செய்வது யார்? என்பதையும் அவர் சொல்லலாமே.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க