...நயன்தாரா படத்தைப் பாராட்டிய சிம்பு

செப்டம்பர் 17 அன்று ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பல் வெளியான த்ரிஷாஇல்லன்னாநயன்தாரா படம் வெளியானது. பல விமர்சனங்களைத் தாண்டி அந்தப்படம் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. அது ஏ சான்றிதழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தைப் பாராட்டி சிம்பு டிவிட் செய்திருக்கிறார். படத்தின் இயக்குநர் ஆதிக் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, படத்தின் கருத்தைப் பற்றிக் கூறுகையில், இன்றைய தலைமுறைக்கான துணிச்சலான படம் என்று அதைப் பாராட்டியிருக்கிறார்.

டார்லிங் படத்தைத் தொடர்ந்து தான் கதாநாயகனாக நடித்த இரண்டாவது படமும் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் ஜி.வி.பிரகாஷூக்கு இது கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!