வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (22/09/2015)

கடைசி தொடர்பு:12:52 (22/09/2015)

ஜின் படம் டார்லிங்2 என்று மாறியது எதனால்?

புதுஇயக்குநர் சதிஷ்சந்திரசேகரன் இயக்கத்தில் கலையரசன், மெட்ராஸ் ஹரி, காளிவெங்கட், முண்டாசுப்பட்டி முனிஸ்காந்த் உட்பட பலர் நடிப்பில் உருவான படத்தின் பெயர் ஜின். அந்தப்படத்தை இயக்குவதோடு நண்பர்களோடு சேர்ந்து தயாரிக்கவும் செய்திருந்தார் சதிஷ்சந்திரசேகரன்.

அந்தப்படம்தான் இப்போது டார்லிங்2 என்று பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது. பெயர் மாறியது எதனால்? இந்தப்படத்தைப் பார்த்த ஸ்டுடியோகிரின் ஞானவேலுக்குப் படம் பிடித்துப்போனதால், படத்தை வாங்கி வெளியிட முடிவு செய்திருக்கிறார்.

இந்தப்படத்தின் கதை அமானுஷ்ய சக்திகளைப் பற்றிய படமென்பதால் டார்லிங் படத்தை நினைவுபடுத்துகிற மாதிரி இருக்கிறது என்று அவர் சொல்லியிருக்கிறார். டார்லிங் வெற்றிப்படம் என்பதால் டார்லிங்2 என்று பெயர் வைத்தால் உடனடியாகக் கவனம் கிடைக்கும் என்று அவர் சொன்னதையடுத்து படத்தின் பெயரை மாற்றிவிட்டார்களாம்.

தொடர்ந்து பேய்க்கதைகளுக்கு வரவேற்பு இருப்பதால் இந்தப்படத்துக்கும் வரவேற்பு இருக்கும் என்று நம்பிக்கையாக இருக்கிறார்களாம்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க