வெளியிடப்பட்ட நேரம்: 12:52 (22/09/2015)

கடைசி தொடர்பு:13:09 (22/09/2015)

தயாரிப்பாளரின் கண்ணீருடன் முடிவுக்கு வந்தது லிங்கா சிக்கல்?

லிங்கா படத்தில் ஏற்பட்ட நட்டம் தொடர்பான சிக்கல்கள் அவ்வப்போது வந்துகொண்டேயிருந்தது. அண்மையில் விஷால் நடித்த பாயும்புலி படம் வெளியானபோது கூட அது தொடர்பான சிக்கல் வந்தது.

இப்படியே தொடர்கதையாகிக் கொண்டிருக்கும் அந்தச்சிக்கலுக்கு முடிவு கட்டியாக வேண்டும் என்பதற்காக ஓரிருநாட்களுக்கு முன்பாக ஒரு கூட்டம் நடந்திருக்கிறது. அந்தக்கூட்டத்தில் லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன்வெங்கடேஷ் தயாரிப்பாளர்சங்கத்தலைவர் தாணு, செயலாளர் சிவா மற்றும் டி..ஜி.தியாகராஜன், கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்களாம்.

லிங்கா சிக்கலைத் தீர்க்க பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக பனிரெண்டரைகோடி கொடுப்பதெனவும் அதில் ஆறரைகோடி ரஜினி கொடுப்பதாவும் மீதியை தாயரிப்பாளர் ராக்லைன்வெங்கடேஷ் கொடுப்பதாகவும் முடிவு செய்யப்பட்டதாம். ரஜினி கொடுக்கவேண்டிய பணம் கொடுக்கப்பட்டுவிட்டதாம்.

ராக்லைன்வெங்கடேஷ் கொடுக்கவேண்டிய ஆறு கோடியில், நாலேமுக்கால் கோடி கொடுத்துவிட்டாராம். நான் மிகவும் சிக்கலில் இருக்கிறேன், மீதி ஒண்ணேகால்கோடியை என்னால் தரஇயலாது என்று அந்தக்கூட்டத்தில் சொல்லியிருக்கிறார்.

அதைப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரித்துத் தராவிட்டால், சிக்கல் நீடிக்கும் என்பதால் மற்றவர்கள் திகைத்துப்போய்விட்டார்களாம்.  அப்போது, திருப்பூர்சுப்பிரமணியம், ரஜினிசார் படங்களை வெளியிட்டு நான் சம்பாதித்திருக்கிறேன் எனவே, அவர் கொடுக்கவேண்டிய ஒண்ணேகால்கோடியை நான் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

இதனால் அவருக்குக் கண்ணீருடன் நன்றி சொல்லிவிட்டு ராக்லைன்வெங்கடேஷ் புறப்பட்டுப்போனதாகச் சொல்லப்படுகிறது. இது நடந்தால் லிங்கா சிக்கல் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க