திருச்செந்தூர் முருகனை வழிபட்ட ஹன்சிகா நெகிழ்ச்சி!

ஹன்சிகா தனது குடும்பத்தாருடன் திருச்சேந்தூர் முருகனை வழிபட்டு திரும்பியுள்ளார். மேலும் 2 மணி நேரங்கள் சிறப்பு தரிசனம், நெய்வேத்தியங்கள் என பங்கேற்றுள்ளனர். மீடியா ஹவுஸின் ஆதித்தனார் சிலை திறப்பு விழாவில் கமல், சிவகார்த்திகேயன் கலந்துகொண்டனர் அதில் ஹன்சிகாவும் இன்னொரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த விழாவிற்கு வந்த ஹன்சிகா தான் முன்கூட்டியே திருச்செந்தூர் முருகனையும் தரிசித்துள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியில் கமலுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஹன்சிகா அதனையும் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ஹன்சிகா கூறுகையில், நீண்ட நாளாக திருச்சேந்தூர் போகவேண்டும் என நினைத்துக்கொண்டிருந்த விஷயம் தான். தற்சமயம் அது பூர்த்தியாகிவிட்டது சிறப்பு தரிசனம், 6 விதமான நெய்வேத்யம் என அனைத்தும் முருகன் கோவிலில் நடந்தது எனவும். மேலும் தனது குடும்பத்தாருடன் கலந்துகொண்டது மகிழ்ச்சி எனவும் திருச்செந்தூர் சென்று வந்தமைக் குறித்து ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!