வெளியிடப்பட்ட நேரம்: 17:08 (22/09/2015)

கடைசி தொடர்பு:18:05 (22/09/2015)

வைரலாகும் அஜித்தின் புது கெட்டப்!

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் தல56 படம் இன்னும் ஓரிரு தினங்களில் முடியும் கட்டத்தை எட்டியுள்ளது. தற்சமயம் மோகன் ஸ்டூடியோஸில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. மேலும் சில காட்சிகள் பின்னி மில்ஸில் நடக்கவிருக்கிறது. 

இந்நிலையில் அஜித்தின் புது கெட்டப் ஒன்று இணையங்களில் வைரலாகி வருகிறது. அதில் தலையை ஒட்டி கத்தரிக்கப்பட்ட சால்ட் & பெப்பர் முடி, கொஞ்சம் அதிகமாக தாடி. மற்றும் கையில் ஒரு தங்க நிற காப்பு மற்றும் மோதிரம் , எல்லவற்றிற்கும் மேல் காதில் கடுக்கன் போன்றதொரு தோடு என கொஞ்சம் கிராமத்து ஸ்டைலும் நகரத்து ஸ்டைலும் கலந்த கலவையில் அப்புகைப்படத்தில் அஜித் காணப்படுகிறார். இந்தப்புகைப்படம் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

அஜித்தின் இந்த கெட்டப் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. ஸ்ருதி ஹாசன் , லட்சுமி மேனன், சூரி என இதுவரை அஜித் படங்களில் பார்த்திராத கூட்டணிகள் என்பதால் படத்தின் தலைப்பிற்காகவும், டீஸருக்காகவும் மிகவும் ஆர்வமாகவே ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க