ராஜமௌலி போல் வரவிரும்புகிறாரா பிரபுதேவா?

இராமாயணத்தைப் படமாக எடுக்கவேண்டும் என்பதே தனது கனவு என பிரபுதேவா கூறியுள்ளார். பிரம்மாண்ட இதிகாசமான இராமயணம் கதையை தகுந்த தயாரிப்பாளர் கிடைத்தால் மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை இயக்குவேன் என பிரபுதேவா கூறியுள்ளார். ஏற்கனவே இப்படம் சம்பூர்ண ராமாயணம் என்ற பெயரில் சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ் நடிப்பில் 1958ல் வெளியானது . மேலும் டிவி தொடராகவும் வெற்றிகரமாக ஓடியது.

இந்நிலையில் பிரபுதேவா ஹாலிவுட்டின் ’லார்ட் ஆஃப் த ரிங்’ பாணியில் இராமயணம் கதையை எடுக்க வேண்டும் என்பதே என் கனவு எனக் கூறியுள்ளார். அமிதாப் பச்சன்,. ரஜினிகாந்த் ஆகியோரை வைத்து படமெடுக்கும் ஆசையும் இருப்பதாக தெரிவித்துள்ள பிரபுதேவா, ஏற்கனவே அமிதாப்பச்சன் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எனினும் அப்போது என்னிடம் தேதிகள் இல்லாமல் போனது.அதனால் அந்த வாய்ப்பு கைநழுவியதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்போது ரஜினி , அமிதாப் இருவரும் கூப்பிட்டால் கண்டிப்பாக இயக்குவேன் எனக் கூறியுள்ளார் பிரபுதேவா.   இதே பாணியில் இயக்குநர் ராஜமௌலி மகாபாரதம் இதிகாசத்தை படமாக எடுப்பதே தனது கனவு எனக் கூறினார். அதிலும் இதிகாசத்தின் ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு கதையென படமாக்க வேண்டும் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!