Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமலாபாலை வைத்து மூன்றுமொழிகளில் படமெடுக்கும் விஜய்?

இயக்குநர் விஜய்யைத் திருமணம் செய்த பிறகு அமலாபால் நடித்திருக்கும் படம் பசங்க2. இந்தப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இது மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் அவர் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இப்போதும் அவரைத் தேடி படங்கள் வந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் வருகிற எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளாமல், படங்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. இப்போது இயக்குநர் விஜய்யே அமலாபாலை மையமாக வைத்து ஒருபடத்தை எடுக்கப்போவதாகச் சொல்லப்படுகிறது.

அந்தப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடுகிற மாதிரி எடுக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கான கதையைத் தயார் செய்துவிட்டதாகவும் விரைவில் இதுபற்றிச் செய்திகள் வரும் என்றும் சொல்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்