வெளியிடப்பட்ட நேரம்: 15:52 (24/09/2015)

கடைசி தொடர்பு:16:08 (24/09/2015)

பாராட்டிய ஷங்கர் நெகிழ்ந்த ஆதி!

தனி ஒருவன் படம் வெளியாகி ஒரு மாதம் முடிவடைய இருக்கும் நிலையிலும் படம் குறித்த பாராட்டுகளும், வசூலும் இன்னும் அடங்கவில்லை. படத்தின் வித்யாசமான போலீஸ் கான்செப்டும், வில்லனாக நடித்த சித்தார்த் அபிமன்யூ பாத்திரமும் அனைவரையும் மெய்மறக்கசெய்தது.

கௌதம் மேனன், சூர்யா, என பலரும் படம் குறித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் இப்படத்தைப் பார்த்து விட்டு தனது பாராட்டுகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது ‘சமீபத்தில் தனி ஒருவன் பார்த்தேன். அருமை ராஜா. ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமியின் நடிப்பும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.ஆதியின் பக்கபலமான பின்னணி ‘ சியர்ஸ் டீம் எனக் கூறியுள்ளார்.

 


டிரெண்டிங் @ விகடன்