வெளியிடப்பட்ட நேரம்: 17:39 (24/09/2015)

கடைசி தொடர்பு:17:49 (24/09/2015)

விஜய் திடீரென பாதைமாற அவர் மகன் காரணமா?

துப்பாக்கி, தலைவா, கத்தி என்று பரபரப்பான படங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜய், திடீரென ஒரு புலி போன்றதொரு பேண்டஸிகாமெடி படத்தில் நடித்திருக்கிறார். அந்தப்படங்கள் துப்பாக்கி, கத்தி போன்ற படங்கள் நன்றாகப் போயிருக்கும் நிலையில் அவர் பாதைமாறிப் பயணிப்பது எதனால்? என்கிற கேள்வி எல்லோருக்கும் இருக்கிறது.

படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டியாகவேண்டும் என்று அவர் நினைக்கமாட்டார். அவருக்கு வேண்டிதெல்லாம், தன்னை நம்பிப்பணம் போடுகிற தயாரிப்பாளரும் தன்னை நம்பிப்படம் பார்க்க வருகிற ரசிகரும் திருப்தியாக இருக்கவேண்டும் என்பது மட்டும்தான்.

அப்படி நினைக்கும் அவர் ஆக்ஷன்படங்கள் நன்றாகப் போகிற நிலையில், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் ஒப்பக்கொண்டது எதனால்? என்கிற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அதற்கு விடையும் இருக்கிறது.

அவருடைய மகன்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள். அவருடைய மகன்தான், ஒரேமாதிரியான படங்களில் நடிக்காமல் இதுபோன்ற படங்களில் நடித்தால்தான் என் வயதுடையோர் ரசித்துப்பார்ப்பார்கள் என்று சொன்னதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதனால் இந்தப்படம் நிச்சயம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தபடமாக அமையும் என்றும் சொல்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்