வெளியிடப்பட்ட நேரம்: 11:19 (25/09/2015)

கடைசி தொடர்பு:11:59 (25/09/2015)

சொந்தவாழ்க்கையிலும் அஜித்தை பின்பற்றும் சிம்பு

நான் அஜித்ரசிகன் என்று வெளிப்படையாகவே சொல்லக்கூடியவர் சிம்பு. படங்களில் அவரைப் பார்த்து ரசிப்பதோடு நின்றுவிடாமல் வாழ்க்கையிலும் அவரைப் பின்பற்றுகிறார்.

அண்மையில் சமுகவலைதளமான டிவிட்டரில் இருந்து சிம்பு விலகினார். இதிலும் அவருக்கு முன்னோடி அஜித்தான் என்கிறார்கள். இரண்டாண்டுகளுக்கு முன்பு இதேநாளில் (செப்டம்பர் 25) டிவிட்டரில் இருந்து வெளியேறினார் அஜித். ஆனாலும் இன்றுவரை அந்தப்பக்கத்தைப் பின்தொடருகிறவர்கள் எண்ணிக்கை குறையவில்லை.

டிவிட்டரில் அடிக்கடி எதாவதொன்றைச் சொல்லப்போக அது சில நேரங்களில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது என்பதாலேயே அஜித், டிவிட்டரிலிருந்து விலகினார் என்று சொல்லப்படுகிறது. அஜித் எடுத்த அதேமுடிவை இரண்டாண்டுகள் கழித்து சிம்பு எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க