முன்னணி ஹீரோக்கள் புதுநடிகைகளுடன் நடிக்கவே ஆர்வம் காட்டுகிறார்கள் , தமன்னா வருத்தம்

புதுமுக நடிகைகளின் வரவு பற்றியும், திரையுலகின் போக்கு பற்றியும் தமன்னா கருத்துத் தெரிவித்துள்ளார்.

“ நிறைய புதுமுக நடிகைகள் வருகிறார்கள். சம்பள விவகாரம், கால்ஷீட் பிரச்னை போன்றவற்றால் இயக்குநர்களும் புதுமுக நடிகைகளுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள். புதுமுக நடிகையென்றால் அதிக சம்பளம் தரவேண்டிய அவசியம் இருக்காது. முன்னணி ஹீரோக்களும் இளம்நடிகையுடனே நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதனால் பிரபல நடிகைகள் அக்கா, அண்ணி வேடங்களுக்கு தள்ளப்படுகின்றனர். நயன்தாரா, திரிஷா போன்ற சில நடிகைகள் மட்டுமே 10 வருடங்களை தாண்டியும் மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டு உள்ளனர். அவர்களும் காதல் படங்களுக்கு பொருத்தம் இல்லை என்று ஒதுக்கப்பட்டு பேய்ப் படங்களில் நடித்து வருகின்றனர்.

முந்தைய காலங்களில் கதாநாயகிகள் குறைவாக இருந்தனர். போட்டியும் இல்லாமல் இருந்தது. இதனால் அவர்கள் கதாநாயகிகளாக அதிக காலம் நீடித்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. புதுமுக நடிகைகள் நிறையபேர் வந்தவண்ணம் இருக்கிறார்கள். போட்டியும் கடுமையாக இருக்கிறது.

எனவே, கதாநாயகியாக நிலைத்து நிற்பது சுலபம் அல்ல. இந்தப் போட்டியிலும் நீடிக்கவேண்டும் என்றால் கதாநாயகிகள் இன்னும் தங்களை திறமையாளர்களாக வளர்த்துக்கொள்ளவேண்டும். இப்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப தங்களை புதிதாக மாற்றிக்கொள்ளவும் வேண்டும் என்கிறார் தமன்னா.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!