வெளியிடப்பட்ட நேரம்: 16:14 (26/09/2015)

கடைசி தொடர்பு:16:40 (26/09/2015)

மன்னிப்புக் கேட்ட குஷ்பூ ஏன் ட்வீட்டை நீக்கவில்லை?

எழுத்தாளரும், நடிகருமான சோ ராமசாமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நிலையில் அவர் இறந்துவிட்டதாக செய்திகள் பரவத்துவங்கின.

இந்நிலையில் இந்தச் செய்தியை குஷ்பூ சுந்தர்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சோ ராமசாமி இறந்துவிட்டதாக தகவல் கிடைத்து வருத்தமடைந்தேன். அவர் ஆத்மா சாந்தியடையட்டும் என டிவிட் செய்தார். இதனையடுத்து ஒரு மணி நேர இடைவெளியில் மீண்டும் நான் போட்ட ட்வீட் தவறான செய்தி. 1000 முறை மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பல காலங்கள் அவர் வாழ வேண்டும் என அடுத்த ட்வீட்டில் கூறியுள்ளார். மேலும் எனக்கு அதிசயமாக இருக்கிறது ஏன் மக்கள் இப்படி ஒருவரது வாழ்க்கையில் விளையாடுகிறார்கள்.

அரசியலில் அவருக்கு எதிராக இருந்தாலும் அவரிடத்தில் மரியாதை இருக்கிறது எனக் கூறியுள்ளார். ஒரு தவறான தகவலைப் பகிர்ந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட குஷ்பூ இன்னும் சோ ராமசாமி குறித்து பதிவிட்ட தவறான ட்வீட்டை இன்னும் எடுக்கவில்லை.மேலும் அவர் பக்கத்திற்கு வரும் யாராக இருந்தாலும் அந்த ட்வீட் பளிச்சென படுகிற மாதிரி இருக்கிறது. அது அப்படியே இருந்தால், கண்டிப்பாக இந்த வதந்தி இன்னும் அதிகமாகத்தானே செய்யும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க