Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித், விஜய்க்கு இணையாக டிவிட்டரில் டிரெண்டான நயன்தாரா!

சேலத்திற்கு நயன்தாரா வருகிறார் என்ற செய்தி இரண்டு நாட்களுக்கு முன்பு பரவ ஆரம்பித்ததிலிருந்தே பிஸியாகிவிட்டது. கல்யாண் சில்க்ஸ் கடைத்திறப்புவிழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக நயன்தாரா சேலத்திற்கு இன்று சென்றார்.

அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் அலைமேதியது. லேடி சூப்பர்ஸ்டார் என்று நயனை கொண்டாடித் தீர்த்தனர் ரசிகர்கள். அதுமட்டுமில்லாமல் ட்விட்டரில் நயன்தாராவின் புகைப்படங்களை ட்விட் செய்ய ஆரம்பித்தனர். உடனே பற்றிக் கொண்டது ட்விட்டர் பக்கம். நயன்தாரா புகைப்படங்கள் வெளியானதையொட்டி, சேலம் என்ற பெயர் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டானது.

நயன்தாரா நடிப்பில் வெளியான மாயா படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடந்துவரும் அதே நேரம் நயன்தாரா சேலத்தில் ரசிகர்களைச் சந்தித்தது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக சொல்கிறார்கள் ரசிகர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
[X] Close