வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (28/09/2015)

கடைசி தொடர்பு:13:00 (28/09/2015)

புலி படத்தால் அதிருப்தியடைந்தாரா ஸ்ரீதேவி?

இங்லீஷ் விங்லீஷ் படத்துக்குப் பிறகு, ஸ்ரீதேவி முக்கியவேடத்தில் நடித்திருக்கும் படம் புலி. இந்தப்படத்தில் கதைக்கு முக்கியத்துவம் உள்ள ராணிவேடத்தில் அவர் நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இதனால் படத்தின் மீது மிகஆர்வமாக இருந்தார் ஸ்ரீதேவி. ஆனால் படத்துக்குக் குரல்பதிவு (டப்பிங்) நடக்கும்போது அவர் நடித்த பல காட்சிகள் படத்தில் இல்லாதது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார் என்றும் அதனால் படத்தின் இயக்குநர் சிம்புதேவன் மீது அவர் கடுங்கோபத்தில் இருந்தார் என்றும் செய்திகள் வந்தன.

இதற்கு இப்போது விளக்கம் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன். அவர் என் மீது கோபப்பட்டார் என்பதில் எந்த உண்மையுமில்லை, படத்தில் எல்லாமொழிகளிலும் அவரே டப்பிங் பேசியிருக்கிறார், படம் குறித்து அவர் சந்தோசமாகவே இருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க