பேய் இருக்கிறதா? என்ற கேள்விக்கு நயன்தாராவின் சுவாரசிய பதில்

மாயா படத்தில் நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்த நயன்தாரா, இப்படத்தில் நடிக்கும் போது நடந்த சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

‘மாயா எனக்கு நான்காவது பேய்ப் படம்.  முதலில் மலையாளத்தில் பேய்ப் படமொன்றில் நடித்தேன். தமிழில் ரஜினிகாந்துடன் ‘சந்திரமுகி’, சூர்யாவுடன் ‘மாசு என்கிற மாசிலாமணி’ போன்ற திகில் படங்களில் நடித்து இருக்கிறேன். எனவே பேய்ப் படங்களில் நடிப்பது எனக்கு பழகிவிட்டது.

மாயா படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவம். டைரக்டர் இந்த படத்தின் கதையைச் சொன்னபோதே பயந்தேன். நள்ளிரவு நேரத்தில் ‘செட்’ போட்டு படப்பிடிப்பை நடத்தினர். மயானங்களில் படப்பிடிப்பு நடந்தது. சில நேரம் மயானத்தில் இருந்து ரொம்ப தூரத்தில் காரை நிறுத்தி விட்டு நடந்துபோகவேண்டி இருந்தது. இருட்டுக்குள் சுடுகாட்டுக்கு நடந்து போனது குலை நடுங்க வைத்தது.



சாப்பாட்டுக்காக வெளியே போக முடியாது. அங்கேயே சாப்பாட்டை வரவழைத்துத் தருவார்கள். நடிகர், நடிகைகளைத்தவிர வேறு யாரும் சுடுகாட்டில் சாப்பிட்டு இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். மயானத்துக்குள் நான் நடிக்கும் இடத்தில் மட்டுமே வெளிச்சம் இருக்கும் மற்ற இடங்கள் கும்மிருட்டாக காட்சியளிக்கும் சிறிய மரம் அசைந்தாலும் பயமாக இருக்கும்

பேய்ப் படங்களை பார்க்க நான் விரும்புவேன். ஆனால் பேய் இருக்கிறது என்று நம்புகிறீர்களா என்று என்னிடம் கேட்டால், பதில் சொல்லத் தெரியாது. சமூகத்தில் நல்லது கெட்டது என்று இருக்கிறது. அதுபோல் நல்லது செய்ய கடவுளும் கெட்டவிஷயங்களுக்கு பேயும் இருக்கலாம் என்றார் நயன்தாரா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!