வெளியிடப்பட்ட நேரம்: 13:29 (28/09/2015)

கடைசி தொடர்பு:13:39 (28/09/2015)

சமந்தாவைப் பற்றிப் பரவும் தவறான வதந்தி!

 சமீபகாலமாக சமந்தா தயாரிப்பாளர் ஆகிறார் தான் சூர்யாவுடன் நடித்துவரும் படமான 24 படத்தை தானே தெலுங்கில் வெளியிடவிருக்கிறார் என செய்திகள் பரவி வருகின்றன. மேலும் தெலுங்கு உரிமையை நிதின் என்பவர் வாங்கியுள்ளார் எனவும் அவருடன் இணைந்து சமந்தா வெளியிடுகிறார் எனவும் செய்திகள் பரவியுள்ளன. இந்நிலையில் சமந்தா இதற்கு பதிலளித்துள்ளார். 

எப்படி இப்படியெல்லாம் செய்திகள் வருகின்றன. இவைகள் எந்த அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. இதற்காக எப்படி தனி ஒரு நேரம் ஒதுக்கி செய்திகள் பரப்ப முடிகிறது என சமந்தா கேட்டதுடன், மேலும் நான் நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறேன். 24 படத்தின் தெலுங்கு உரிமத்தை நிதின் வாங்கியுள்ளது உண்மை. ஆனால் அவருடன் நான் சேர்ந்து வெளியிடுகிறேன் என்பது முற்றிலும் வதந்தி. 

 தயாரிப்போ , விநியோகமோ நான் இதுவரை சிந்தித்தது கூட இல்லை. தமிழில் விஜய் படம்,விக்ரமுடன் பத்து எண்றதுக்குள்ள, சூர்யாவுடன் 24, மற்றும் பேங்களூர் டேய்ஸ் ரீமேக் படங்கள் கையில் உள்ளன. மேலும் தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்க விருக்கும் பிரம்மோத்சவம் படத்தில் விரைவில் இணையவிருக்கிறேன். நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன் என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சமந்தா. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க