ஷங்கரின் கணக்குத் தப்பானதா? ராஜமௌலியின் அடுத்த ஸ்டெப்!

 ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வெளியான படம் பாகுபலி. 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் 600கோடிகளை வசூலித்து சர்வசாதரணமாக 300 கோடி க்ளப்பில் முதன்முறையாக காலடி வைத்த தென்னிந்தியப் படமாக பாராட்டுகளை அள்ளியது. 

படத்தின் புகழ் சீனா வரை பரவ அங்கும் 5000 திரைகளில் பாகுபலி மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் பாகுபலி 2 படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் நிறைவையடுத்து மீண்டும் தனது அப்பாவின் கதையம்சத்தில் படமொன்றை எடுக்கவிருக்கிறாராம்.

மிகப் பிரம்மாண்டமாக உருவாக உள்ள அப்படத்தின் பெயர் கருடா எனவும், பட்ஜெட் 1000 கோடி எனவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஸ்க்ரிப்ட் வேலைகளை ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆரம்பித்து விட்ட நிலையில் படத்தை தயாரிக்கப் போவது யார், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் யார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

தற்சமயம் ஷங்கர் தனது எந்திரன் 2 படத்தின் உருவாக்கத்தில் இருக்கிறார். படத்திற்கு உலகப் புகழ் பெற்ற நடிகர் தான் வில்லன் எனவும், மேலும் படத்தின் பட்ஜெட் 250 கோடிகளைத் தாண்டலாம் எனவும் சொல்லப்பட்டு வந்தது. இது நடந்தால் ராஜமெளலியின் சாதனையை ஷங்கர் முறியடித்திருப்பார். ராஜமௌலி மீண்டும் அடுத்த பிரம்மாண்டத்திற்கு தயாராகிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.  பலரும் கண்டிப்பாக ஷங்கர் பாகுபலியின் பிரம்மாண்டத்தை முறியடிக்க முயற்சி செய்வார் எனக் கூறி வந்த நிலையில் அதைப் பொய்யாக்க ராஜமௌலி அடுத்த படியில் ஏறி நிற்கிறார் என சலசலக்கிறார்கள் 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!