கமல், அஜித்தை முந்தினாரா ஜெயம்ரவி?

இந்தஆண்டு இதுவரை வெளியான படங்களில் அதிகவரவேற்பையும் வசூலையும் பெற்ற படமாக தனிஒருவன் இருக்கிறதாம். இந்தஆண்டு ஜூலையில் வெளியாகி வெற்றிபெற்ற படம் கமலின் பாபநாசம், பிப்ரவரிமாதம் கௌதம் இயக்கத்தில் அஜித் நடித்த என்னைஅறிந்தால் படம் வெளியானது.

மே மாதம் வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்த மாசுஎன்கிறமாசிலாமணி படம் வெளியானது. அந்தப்படங்களெல்லாம் அதனுடைய பட்ஜெட்டைத் தாண்டி வசூல் செய்தது என்று வைத்துக்கொண்டாலும் இலாபக்கணக்கில் குறைவாகத்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள்.

இலாபம் என்கிற அடிப்படையில் பார்த்தால் மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த தனிஒருவன் படம் தான் முன்னிலையில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தஆண்டில் இதுவரை விஜய் படம் வெளியாகவில்லை, எனவே பெரியஇலாபத்தைக் கொடுத்த நாயகன் என்றால், அது ஜெயம்ரவிதான் என்று திரைப்படவியாபாரிகள் கணிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!