தயாரிப்பாளரை ஏமாற்றிய வடிவேலு! போனில் மிரட்டுவதாகவும் புகார்!

யுவராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து சமீபத்தில் வெளியான படம் எலி. படம் வெளியாகி எதிர்பார்த்த வசூல் சாதனையைப் படைக்கவில்லை. 

இப்படத்தை மதுரையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சிட்டி சினிகிரியேஷன்ஸ் சார்பாக தயாரித்தார். இப்படம் 12 கோடிரூபாய் பட்ஜெட்டில் தயாரானதாகச் சொல்லப்படுகிறது. அதில் 8 கோடிரூபாயை வடிவேலு சம்பளமாகவே பெற்றுக் கொண்டாரம்.

படம் வெளியாகி 1 கோடிரூபாய் கூட வசூல் பெறவில்லை. மேலும் படம் தோல்வியடைந்தால் அதை ஈடுகட்ட வடிவேலு படம் தருவதாக முன்னரே சொல்லியிருந்தாராம். நஷ்டமடைந்த தயாரிப்பாளர் இதுபற்றி வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பதிலும் வரவில்லை. 

வாங்கிய சம்பளத்தில் பாதி ரூபாயாவது திருப்பித் தரும்படி கேட்டிருக்கிறார் தயாரிப்பாளர். அதற்கு, வேண்டுமென்றால் இன்னொரு படத்தைத் தயாரியுங்கள். அதில் சம்பளமின்றி நடித்துத் தருவதாக வடிவேலு சொன்னதாக சொல்லப்படுகிறது.

இதனால் குழப்பத்திற்கு ஆளான தயாரிப்பாளர் சதீஷ் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில், “ வடிவேலு தன்னை ‘எலி’ படத்துக்கு தயாரிப்பாளராக்கி பெரும் நஷ்டத்திற்குள்ளாக்கிவிட்டார் என்றும், பணத்தைத் திருப்பிக் கேட்டால் தர மறுக்கிறார் என்றும் கூறியுள்ளார். மேலும் வடிவேலு சார்பாக முன்னாள் சட்டமன்ற துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி தன்னை போனில் மிரட்டுகிறார்” என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!