தனுஷின் பேராசை

இந்தியன் பிரிமியர் லீக் போன்று, எட்டு அணிகள் இடையிலான 2-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் வருகிற 3-ந் தேதி முதல் டிசம்பர் 20-ந் தேதி வரை நடக்கிறது. இந்த சீசனுக்கான ஐ.எஸ்.எல். போட்டியின் விளம்பர தூதராக முன்னணி தமிழ்த் திரைப்பட நடிகர் தனுஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் கால்பந்து போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆட்டத்தை பிரபலப்படுத்தும் பணியில் ஈடுபடுவார். ஐ.எஸ்.எல். தூதராக நியமிக்கப்பட்ட நடிகர் தனுஷ், அதற்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது... இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு வயது முதலே நான் கால்பந்து ரசிகன். கால்பந்து ஆட்டங்களை ரசித்துப் பார்ப்பேன். சிறுவயதில் தெருக்களில் கால்பந்து விளையாடி இருக்கிறேன்.

90 நிமிடங்கள் விறுவிறுப்பாக அரங்கேறும் கால்பந்து ஆட்டம் எல்லோருக்கும் பிடித்தமானதாகும். ஐ.எஸ்.எல். போட்டி கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனதுடன் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த சீசன் கடந்த ஆண்டை விட விறுவிறுப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த ஆண்டில் நிறைய திறமையான புதிய வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

நமது நாட்டில் கிரிக்கெட் ஆட்டம் தான் பிரபலமாக விளங்குகிறது. இந்தப் போட்டியின் மூலம் கால்பந்து ஆட்டம் நிச்சயம் பிரபலம் அடையும். சினிமாவில் கால்பந்து வீரராக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். அந்த பாத்திரத்துக்கு நான் பொருத்தமானவன் என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். விளையாட்டுவீரராக அதுவும் கால்பந்துவிளையாட்டு வீரராக நடிக்கவேண்டும் என்கிற தனுஷின் ஆசை பேராசை என்கிற விமர்சனங்களும் இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!