நிருபர்களைத் தாக்கிய சமந்தாவின் அம்மாவும், அண்ணனும்( வீடியோ இணைப்பு)

புலிப் படக்குழுவினர் கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய்களில் படமெடுத்துள்ளதாக கூறி விஜய், கலைப்புலி தாணு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரின் வீடுகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதில் மேலும் சமந்தா, நயன்தாரா உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் சமந்தாவின் வீட்டிற்கு செய்திகள் சேகரிக்கச் சென்ற நிருபர்களை சமந்தாவின் அம்மாவும், சகோதரரும் தாக்கியுள்ளனர். நீங்கள் இங்கே வரவேண்டிய அவசியம் இல்லை, என சமந்தாவின் அம்மா கேமராவை தட்டிவிட உள்ளிருந்து சகோதரர் வெளியில் வந்து நிருபரை அடித்துத் தள்ளிவிட்டு உள்ளேச் சென்று விடுகிறார்.

சமந்தாவின் தந்தை ஒருகட்டத்தில் சமாதானம் செய்ய வெளியில் வந்தவர் என் பெண்ணை வைத்து இங்கே சம்பாதிக்கும் அளவிற்கு எங்களுக்கு இங்கே எந்தத் தேவையும் இல்லை. உள்ளே சோதனை நடக்கிறது இருந்து என்ன தொகை, என்ன விபரம் என கேட்டுவிட்டு செல்லுங்கள்.

நாங்கள் மிகவும் எளிமையாக வாழ்ந்து வருகிறவர்கள் எனப் பேசி அனுப்பியுள்ளார். எனினும் எடுத்த எடுப்பில் கேமராவைக் கீழே தள்ளி நிருபரை அடிக்க கை ஓங்கியதெல்லாம் எந்த விதத்தில் நியாயம் என தற்போது மீடியாக்கள் கேள்விகள் கேட்கத்துவங்கியுள்ளனர்.

வீடியோவிற்கு: 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!