தெரிந்தே தான் வைத்தார்களா அஜித் படத்திற்குப் பெயர்?

 சிவா இயக்கத்தில் அஜித்,ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் வேதாளம். படத்திற்கு இசை அனிருத். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு சென்ற வாரம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் வரம், வெட்டி விலாஸ், அடங்காதவன் உள்ளிட்டப் பல பெயர்கள் பரிசீலனையில் இருக்கையில் வேதாளம் என பெயர் வைத்ததும், ஒரு மாஸ் ஹீரோவின் படத்திற்கு வைக்கப்பட்ட பெயரா இது என பலரும் விமர்சித்தனர். எனினும் இந்த வாரம் வெளியான புலி படத்தைப் பார்க்கையில் படத்தின் தலைப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் வேறு விதமாக பேசப்பட்டு வருகிறது. 

உண்மையில் வேதாளம் யார் என்ற கேள்வி ஒரு பக்கம் எனில் மற்றொரு பக்கம் புலி படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வேதாளம்,வேதாள உலகம் என சொல்லப்படுவதைக் கண்ட ரசிகர்கள் , வேதாளம் படத்திற்கு விளம்பரமா என அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் பேசிக்கொண்டிருக்கிறார்கள், மற்றொரு பக்கம் புலி படத்தில் வேதாளம்தான் வில்லன் என விஜய் ரசிகர்களும் மாறி மாறிப் பேசிக் கொள்ள விஷயம் காரசார விவாதமாக மாறியுள்ளது. 

எனினும் மற்றொரு மாஸ் ஹீரோவின்  படக்குழு திரும்பத் திரும்ப படத்தில் வைத்திருக்கும் இந்த வேதாளம் என்ற வார்த்தையை வைத்திருப்பது அஜித் படக்குழுவினருக்குத் தெரிந்துவிட்டதா? அதை மனதில் வைத்துத்தான் இப்படி பெயர் வைத்திருப்பார்களோ? என்ற ஐயமும் உண்டாகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!